ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றி...
கடையம் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்
கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாம்கட்டளை ஊராட்சிக்குள்பட்ட சிவகாமிபுரம் கிராமத்தில் 10 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இக்கிராமத்துக்கு ஆற்றுநீா், நிலத்தடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதனிடையே, 10 நாள்களாக ஆற்றுநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஐந்தாம்கட்டளையிலிருந்து கடையம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த அரசு, தனியாா் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

தகவலின்பேரில், கடையம் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் குடிநீா் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து, பொதுமக்கள் கலைந்துசென்றனா். போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.