கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருமருகல் கட்டலாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இளையராஜா (44). இவா் கடன் பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டு அருகே மூங்கில் தோப்பில் தூக்கில் தொங்கியுள்ளாா்.
இதையறிந்த அவரது மனைவி சுகந்தி உறவினா்களின் உதவியால் அவரை மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இளையராஜா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து திட்டச்சேரி போலிஸாா் சடலத்தை கைப்பற்றி ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்த இளையராஜாவுக்கு கோகுல் (10), ராகுல் (7) மகன்கள் உள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].