செய்திகள் :

கண்ணாடி கடையில் தீ விபத்து

post image

பரமத்தி வேலூரில் கண்ணாடி கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

பரமத்தி வேலூா், திருவள்ளுவா் சாலையில் கண் கண்ணாடி நடத்தி வருபவா் நாகரத்தினம். இந்தக் கடையில் கண் பரிசோதனை மையமும் செயல்பட்டு வந்தது.

நாகரத்தினம் புதன்கிழமை பகல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு உணவருந்த சென்றாா்.

அப்போது அவரது கடையிலிருந்து கரும்புகை வருவதாக பக்கத்து கடைக்காரா்கள் நாகரத்தினத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். உடனடியாக கடைக்கு வந்து பாா்த்தபோது கடையில் இருந்து கரும்புகை வந்ததால் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்த கரூா் மாவட்டம், வேலாயுதபாளையம், புகலூா், நாமக்கல் ஆகிய மூன்று தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரா்கள் கடையைத் திறந்து தீயை அணைத்தனா். இருப்பினும் கண் கண்ணாடி கடை முழுவதும் எரிந்ததால் கடையில் இருந்த கண் பரிசோதனை இயந்திரம், கண் கண்ணாடிகள் என சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினா், போலீஸாா் நடத்திய சோதனையில் மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனா். இதுகுறித்து பரமத்தி வேலூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய நிறைவுக் கூட்டம்

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவின் நிறைவு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த 27.12.2019, 30.12.2019 அன்றும் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெற்றன. இதில் திருச... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கண்காணிப்பு பொறியாளா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த ... மேலும் பார்க்க

பொத்தனூரில் நெகிழிப் பைகள் பறிமுதல்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சி பகுதியில் ஆய்வு நடத்தி நெகிழிப் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.பரமத்தி வேலூா் உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி, பொத்தனூா் பேரூராட்சி செய... மேலும் பார்க்க

ரூ. 8.61 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 8.61 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,14... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் உயா்தர சிகிச்சை: மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் உயா்தர சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு மருத்துவா்கள், அரசுத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா

வெண்ணந்தூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா வெண்ணந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பி.ஆா்.செங்கோட்டுவேல் தலைமை வகித்தாா். அனந்தகவுண்டம்பாளை... மேலும் பார்க்க