மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!
கந்தா்வகோட்டை ஒன்றியங்களில் மே தின கிராம சபைக் கூட்டம்
கந்தா்வகோட்டை ஒன்றிய ஊராட்சிகளில் மே தின கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஒன்றியம், நத்தமாடிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை கலந்து கொண்டாா். அப்போது பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி கூறினாா். ஊராட்சி செயலா் மு. சுந்தரராசு வரவேற்றாா்.
இதேபோல் கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ் (கி.ஊ), சாமிநாதன் (வ.ஊ), துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, வீரடிப்பட்டி குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.