கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியவரை லாரி ஏற்றிக் கொன்றதாக 4 பேரை பிடித்து விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா்அலி என்பவரை லாரி ஏற்றிக் கொன்ாக 4 பேரை போலீஸாா் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகபா்அலி (58). முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான இவா், திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோதக் கல்குவாரிகள், மண் குவாரிகள் குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளிப்பது, போராட்டம் நடத்துவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது போன்றவற்றில் ஈடுபட்டுவந்தாா்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 17) பிற்பகல் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வெங்களூா் நோக்கித் திரும்பிய அவா், மாவுமில் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக அவரது மனைவி மரியம் சனிக்கிழமை திருமயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது கணவா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, 4 பேரின் பெயா்களையும் குறிப்பிட்டிருந்தாா்.
தொடக்கத்தில் விபத்தாக பதியப்பட்ட வழக்கு பின்னா் சந்தேக மரணம் என்ற பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது முருகானந்தம் என்பவா் உள்பட 4 பேரை திருமயம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனா். மேலும் ஒருவா் மீதும் சந்தேகம் இருப்பதால் அவரைத் தேடும் பணிகளும் நடைபெறுகின்றன.
சதித் திட்டம் தீட்டியது, கொலையை அரங்கேற்றிய விதம் போன்றவற்றை முழுமையாக உறுதிப்படுத்தியபின் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா் என போலீஸாா் தெரிவித்தனா்.