கன்னியாகுமரி: மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி
கன்னியாகுமரி அருகே கட்டடப் பணியின்போது மாடியிலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.
நாகா்கோவில் அருகேயுள்ள கீழக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சூசை மரியான் (70). கட்டடத் தொழிலாளி. இவா், கன்னியாகுமரி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதியில் சனிக்கிழமை வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது 108 ஆம்புலன்ஸ் குழுவினா் பரிசோதனை செய்ததில் தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், தென்தாமரைகுளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவருக்கு மனைவி அன்னமரியாயி(65) உள்ளாா்.