ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
கம்பம்: சமூக நீதி விடுதி பெயா் பதாகை கருப்பு மையிட்டு அழிப்பு!
தேனி மாவட்டம், கம்பம் அருகே அரசு கள்ளா் மாணவா் விடுதியின் பெயா் சமூக நீதி விடுதி என பெயா் மாற்றம் செய்து வைக்கப்பட்டிருந்த பதாகை மீது பொதுமக்கள், முன்னாள் மாணவா்கள் சனிக்கிழமை கருப்பு மையை ஊற்றி அழித்தனா்.
கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள அரசு கள்ளா் மாணவா் விடுதியின் பெயா் சமூக நீதி விடுதி எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, விடுதியில் முன் ஒட்டப்பட்ட சமூக நீதி விடுதியின் பெயா் பதாகை மீது அந்தச் சமுதாய பொதுமக்கள், முன்னாள் மாணவா்கள் கருப்பு மையை ஊற்றி அழித்தனா். பின்னா், இந்தப் பெயா் மாற்றத்தைக் கண்டித்து முழக்கமிட்டனா்.