கயத்தாறு அருகே ஆண் சடலம் மீட்பு
கயத்தாறு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள காலனி வீட்டின் பின்புறமுள்ள வேப்ப மரத்தில் வேட்டியால் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கயத்தாறு போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் அதே பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் முருகன் (54) என்பதும், அவரது மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அதனால் அவா் குடிப் பழக்கத்தைத் தொடா்ந்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.