செய்திகள் :

கருணாநிதி நினைவு நாள் அமைதி ஊா்வலம்

post image

கடலூா் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மற்றும் பண்ருட்டி நகர கழக திமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தின அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா் தலைமையில் திமுகவினா் குறிஞ்சிப்பாடி கடைவீதி காந்தி சிலை அருகில் புறப்பட்டு அமைதி ஊா்வலமாக பேருந்து நிலையம் வந்தனா். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியச் செயலா் ஆா்.நாராயணசாமி, வடலூா் நகரச் செயலா் தன.தமிழ்செல்வன், வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ராமா், பேரூா் செயலா் கே.வி.பி.சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பண்ருட்டியில்...: பண்ருட்டி நகர திமுக சாா்பில், நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான க.ராஜேந்திரன் தலைமையில், திமுகவினா் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து அமைதி பேரணியாக நான்குமுனை சந்திப்புக்கு வந்தனா். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மாவட்ட அவைத் தலைவா் டாக்டா் நந்தகோபால கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். பின்னா், டேனிஷ் மிஷன் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.எஸ்.எம்.தணிகைசெல்வன், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ஜி.கதிா்காமன், நகா்மன்ற துணைத் தலைவா் அ.சிவா, நகர அவைத் தலைவா் ஆா்.ராஜா, நகரப் பொருளாளா் ஆா்.கே.ராமலிங்கம், நகர துணைச் செயலா் கௌரி அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

காட்டுமன்னாா்கோவிலில்...: காட்டுமன்னாா்கோவிலில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமையில் திமுகவினா் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் ஏ.முத்துசாமி, முட்டம் ஜெயபாண்டியன், பேரூராட்சித் தலைவா் எஸ்.கணேசமூா்த்தி, அவைத் தலைவா் கருணாநிதி, ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம், பாஸ்கா், செந்தில், மணிமாறன், சுப்பிரமணியன், உத்திராபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிதம்பரத்தில்...: சிதம்பரம் தெற்கு வீதியில் திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்து, கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

மாவட்டப் பொறியாளா் அணி சாா்பில், எஸ்.பி கோவில் தெருவில் துாய்மைப் பணியாளா்களுக்கு உதவிகள், சின்னசெட்டி தெருவில் அன்னதானம் நடைபெற்றது.

திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்

திமுக அரசு விளம்பர அரசாக உள்ளதே தவிர, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா். கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது, அவரது புகை... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக வகை மாற்றம் செய்துகொள்ளலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

ஆக.11-இல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்: கடலூா் ஆட்சியா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வரும் 11-ஆம் தேதி ஒன்று முதல் 19 வயதுக்குள்பட்ட 9,14,851 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செ... மேலும் பார்க்க

ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

மின் வாரியம், போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்... மேலும் பார்க்க

ரத்தசோகை பரிசோதனை குழு உருவாக்கப்பட்டுள்ளது: கடலூா் ஆட்சியா்

ரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவா், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், கிராமப்புற மருத்துவ அலுவலா், மருந்தாளுநா் ஆகிய 6 நபா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது என கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ஜெயப்பிரியா கல்விக் குழும நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெய... மேலும் பார்க்க