ராயபுரம், தேனாம்பேட்டையில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது
கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?
கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
முதல் மூன்று போட்டிகளில் கருண் நாயர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். இந்த போட்டிகளில் அவருக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக அவரால் மாற்ற முடியவில்லை. இதன் காரணமாக, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான தீப் தாஸ்குப்தா பேசியதாவது: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்ஷனை மீண்டும் சேர்க்கும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். லார்ட்ஸ் டெஸ்ட்டில் வெற்றிக்கு மிக அருகில் சென்று இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் இருந்தது.
இந்த போட்டியில் நான் 3-வது வீரராக களமிறங்கும் கருண் நாயரை கவனித்தேன். இளம் வீரரான சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பளிக்காமல் தொடர்ச்சியாக கருண் நாயருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா? முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சாய் சுதர்ஷன் நன்றாக விளையாடினார். அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23 முதல் மான்செஸ்டரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
It is said that Karun Nair's time is up and he is unlikely to be included in the playing eleven for the next match.
இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம்: டாப் 10-இல் 5 ஆஸி. வீரர்கள்!