செய்திகள் :

கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ. 5,500 வழங்க வேண்டும்! - ராமதாஸ்

post image

கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது என்றும் டன்னுக்கு ரூ. 5,500 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 3,550 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு  ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும்  என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல.

2024-25ஆம் ஆண்டில் 9.50% சர்க்கரைத்  திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,151 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது. இப்போது ரூ.139, அதாவது 4.41% மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  கரும்புக்கான சாகுபடி செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில்,  4.41% மட்டும் விலையை உயர்த்துவது நியாயமற்றது. இது உற்பத்திச் செலவை ஈடு செய்வதற்கு கூட போதாது.

தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ. 5500 வழங்கப்பட வேண்டும் என்பதுதான் உழவர் அமைப்புகளின் கோரிக்கை ஆகும். ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ. 3500 வரை செலவாவதாக உழவர்கள் கூறுகின்றனர். அதனுடன் 50% லாபமாக ரூ.1750 மற்றும் போக்குவரத்துச் செலவு சேர்த்து டன்னுக்கு ரூ.5500 வழங்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், உற்பத்தி செலவை விட குறைவாக தொகையை கொள்முதல் விலையாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குறைவாக நிர்ணயித்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் உழவர்களுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்குவது வாடிக்கை.  அதன்படி கடந்த ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்த விலையுடன், தமிழகஅரசு ரூ.349 ஊக்கத்தொகை சேர்த்து கரும்புக்கு டன்னுக்கு ரூ.3500 கிடைக்க வகை செய்தது. நடப்பாண்டில்  டன்னுக்கு ரூ.3700 கிடைக்கும் வகையில்  ரூ.410 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வரலாம் என்று கூறப்படுகிறது.  இதுவும் கூட போதுமானதல்ல.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4100 கொள்முதல் விலை வழங்கப்பட்டது.  நடப்பாண்டில் அது ரூ.4500 ஆக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும்போது தமிழக அரசு வழங்கவிருக்கும்  கொள்முதல் யானைப்பசிக்கு சோளப்பொரியாகவே  பார்க்கப்படும்.

2016 ஆம் ஆண்டு வரை ஒரு டன் கரும்புக்கு ரூ.750 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2017 ஆம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குவோம் என்று அறிவித்தது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது இப்போது டன்னுக்கு ரூ.1100 ஆக அதிகரித்திருக்கும்.  அத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் ஒரு டன்  கரும்புக்கு  ரூ. 4,390 ஆக உயரக்கூடும். அது ஓரளவு கட்டுபடியாகக் கூடிய விலையாக இருந்திருக்கும். ஆனால், திமுக, சட்டப் பேரவைத் தேர்தலில் அளித்த அதன் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதால் உழவர்களின் துயரம் தீரவில்லை.

2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு 8 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக இருந்தது. ஆனால், நடப்பாண்டில்  அது 2.25 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதற்கு காரணம் கரும்புக்கு நியாயமான விலை கிடைக்காதது தான்.  இதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில்  தமிழ்நாடு கரும்பு விளையாத மாநிலமாக மாறிவிடும்.  அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடாமல் மத்திய மாநில அரசுகள்  தடுத்து நிறுத்த வேண்டும்.

கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்தி ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ. 4,000 நிர்ணயிக்க வகை செய்ய வேண்டும். அத்துடன் தமிழக அரசின் சார்பில் டன்னுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தவெக தொண்டா்களுக்கு விஜய் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள விஜய், தொண்டா்களின் பாதுகாப்... மேலும் பார்க்க

திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.உலக உழைப்பாளர்கள் நாளை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே நாள் பூங்காவில் உள்ள மே நாள் நினைவுச் சின்னத்திற்கு மு... மேலும் பார்க்க

எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: ஏஐ உள்ளிட்ட எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கேற்ப தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள். இதுதான் மற்ற மாநிலத்திற்கு தமிழகத்திற்கு உள்ள வேறுபாடு என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ... மேலும் பார்க்க

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 30.10 கி.மீ நீளத்துக்கான ஆறுவழிச் சாலை திட்டப்பணிகளை வியாழக்கிழமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை எல்லை சால... மேலும் பார்க்க

மதுரைக்கு வரும் விஜய், பேரணி நடத்தினால் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!

தவெக தலைவர் விஜய் இன்று மாலை மதுரை விமான நிலையம் வரவுள்ள நிலையில், இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் படப்பிடிப்புக்காக இன்று(வியாழக்கிழமை) கொடைக்கான... மேலும் பார்க்க

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர... மேலும் பார்க்க