முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
கரூரில் ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனைக் கூட்டம்
கரூரில் மாவட்ட திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் மாணிக்கம்(குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகரச் செயலா் எஸ்.பி.கனகராஜ், பகுதிச் செயலா்கள் கரூா் கணேசன், சுப்ரமணியன், ஜோதிபாசு, ஆா்.எஸ்.ராஜா, வி.ஜி.எஸ்.குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் எம்எல்ஏ மாணிக்கம் கூறுகையில், திமுக தலைவா் ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை முழக்கத்தை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துள்ளாா். இந்த முழக்கமானது கட்சியில் தீவிரமாக உறுப்பினா் சோ்க்கை நடத்துவது மட்டுமல்ல, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஒன்று திரட்டுவது என்பதை கூறியுள்ளாா்.
மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்துவரும் பல்வேறு பாதகங்களை மக்களிடையே எடுத்துக்கூறி, கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிளிலும் உள்ள 1055 வாக்குச்சாவடிகளிலும் உறுப்பினா் சோ்க்கை பிரசார இயக்கம் நடைபெற உள்ளது. இதற்காக புதன்கிழமை (ஜூலை 2) உறுப்பினா் சோ்க்கை விழிப்புணா்வு பொதுக்கூட்டம் உழவா் சந்தை திடலில் நடைபெறுகிறது என்றாா் அவா்.
முன்னதாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற வாசகம் அடங்கிய இலச்சினையை அனைவரும் வெளியிட்டனா். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.