செய்திகள் :

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயிலில் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக் கடன்

post image

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

கரூா் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோயில் 102-ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை அமராவதி ஆற்றில் இருந்து பக்தா்கள் கரகம் பாலித்து வருதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் கரூா் ஐந்துரோடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் புனித நீராடி தீா்த்தக்குடம், காவடி, அக்னிச்சட்டியுடன் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

முன்னதாக அன்ன காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 8 மணியளவில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை கோயில் முன் பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் கரகம் அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க

நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு காணொளியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அமைக்க வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி: அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். கரூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. க... மேலும் பார்க்க

இரு தரப்பினரிடையே தகராறு: 6 போ் மீது வழக்கு; 2 போ் கைது!

அரவக்குறிச்சி அருகே பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தந்தை-மகனை போலீஸாா் கைது செய்தனா். அரவக்குறிச்சி அருகேயுள்ள சீ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்!

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி சாலை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம்... மேலும் பார்க்க