கரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைப்பு
கரூரிலிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படும்போதே மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரூா் மாவட்டத்தில் உள்ள 130 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான 3 செட் சீருடைகள், பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் ஆகியன கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கிடங்கில் இருந்து அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.