செய்திகள் :

கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?

post image

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இன்று சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசும்போது, ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், ஆர்எஸ்எஸ் பாடலை பாடும் அந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நமஸ்தே சதா வத்சலே என்று தொடங்கி, கர்நாடக சட்டப்பேரவையில் இன்று தன்னுடைய விளக்கத்தின்போது ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியிருக்கிறார் துணை முதல்வர்.

ஆளும் பாஜகவின் சித்தாந்தத்தின் அடித்தளமாக இருக்கும் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐ காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில், கர்நாடக துணை முதல்வரின் இந்த செயல், காங்கிரஸ் கட்சியினரை மட்டுமல்லாமல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த விடியோ குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் சிவக்குமார், ஒரு காங்கிரஸ்காரராகப் பிறந்திருப்பவர், தன்னுடைய எதிரி யார் என்பதை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

என்ன நடந்தது?

எதிர்க்கட்சியினருக்கும், சிவக்குமாருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டபோது, சிவக்குமார், தன்னுடைய அறிவு மற்றும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பேச்சுத் தொடங்கியது.

தொடர்ந்து பேசிய சிவக்குமார், உங்களை கண்டிக்க அனைத்து அறிவையும் பெற்றிருக்கிறேன். உங்கள் பள்ளியில் நான் படிக்கவில்லை என்றாலும், நான் பரமேஸ்வரா பள்ளியில் படித்திருக்கிறேன் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பாஜகவின், பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அஷோகா, நீங்கள், ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்திருக்கிறேன் என்று சொன்னதை நினைவுகூர்ந்தார். ஏற்கனவே தன்னுடைய நேர்காணலின் போது சிவக்குமார், தான் சிறுவனாக இருந்தபோது, பெங்களுரில் ஆர்எஸ்எஸ் பயிற்சியில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டிருந்ததைத்தான் பேரவையில் அஷோகா குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கேட்டதும் சற்றும் தாமதிக்காமல், சிவக்குமார், நமஸ்தே சதா வத்சலே என்று தொடங்கும் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடத் தொடங்கினார். இதனால், ஒட்டுமொத்த பேரவையும் அமைதியானது. அங்கிருந்த பலரும், துணை முதல்வர் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடுவதைக் கேட்டும் பார்த்தும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர், ஆர்எஸ்எஸ் பாடலை அதுவும் சட்டப்பேரவையில் பாடுகிறார் என்பது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாகி, விடியோ வைரலாகிவிட்டது.

ஆக.25ல் ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

குஜராத்திற்கு ஆகஸ்ட் 25ல் வருகைதரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என குஜராத் முதல்வர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார். ஆக்ஸியம் மிஷன் - 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீர... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் வெளுத்துவாங்கும் கனமழை: 2 பேர் பலி!

ராஜஸ்தானின் பெய்த கனமழைக்கு 2 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாள்களாக ராஜஸ்தானில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

கறைபடிந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா? மௌனம் கலைத்தார் மோடி

கறைபடிந்த நபர்கள் பிரதமராகவோ, முதல்வராகவோ, அமைச்சராகவோ ஏன் பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.மத்திய அரசு கொண்டு வந்த பதவி நீக்க சட்ட மசோதாவுக்கு எதிர்ப்ப... மேலும் பார்க்க

தாக்குதல் சம்பவம்: முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!

தில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் முதல்முறையாக காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். காந்தி நகர் மொத்த விற்பனை சந்தையின் ஆடை கண்காட்சியான வஸ்த்ரிகாவின் தொ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 6.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் மீது ஏறி நாடாளுமன்ற சுற்றுச்சுவரைத் தாண்டி ... மேலும் பார்க்க