இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
கலைஞா் கருணாநிதி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் தொடா்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீத மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. விஜயலட்சுமி பழனிசாமி அறக்கட்டளை மூலம் அதிக மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது என்றாா். துணைத் தலைவா் இந்து முருகேசன் வரவேற்றாா்.
சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், உலகம் முழுவதும் பொறியாளா்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மாணவா்கள் தங்களது துறையில் அடிப்படை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு சமுதாயத்துக்குப் பயன்படும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், இன்டெல் காா்ப்பரேஷன் நிறுவன தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீராம் வாசுதேவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். கல்லூரி முதல்வா் ரமேஷ், துணை முதல்வா் மைதிலி, பல்வேறு துறைத் தலைவா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா். பேராசிரியா் யமுனா நன்றி கூறினாா்.