கல்லறையிலும் க்யூஆர் கோடு! நினைவலைகளைப் புதுப்பிக்க புதிய முயற்சி!!
மனிதர்கள், தாங்கள் மிகவும் விரும்பியவர்களின் நினைவுகளைப் பெட்டகமாகப் பாதுகாக்கவே விரும்புவார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகவே கேரள கல்லறைகளில் க்யூஆர் கோடு நிறுவப்பட்டுள்ளது.
கேரளத்தில் உள்ள கல்லறைகளில், உலோகத்தால் ஆன க்யூஆர் கோடுகள் உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த க்யூஆர் கோடுகளை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள் என அனைத்தையும் அறிந்துகொள்ள முடியுமாம்.