கல்லூரி மாணவா் தற்கொலை
பெரியகுளம் அருகே கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி திரவியம் கல்லூரி சாலையைச் சோ்ந்த மணி மகன் முத்துகணேஷ் (19). தேவதானப்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரி 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவா் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனா்.