கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கெங்கவல்லியை அடுத்த இலுப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் டாஸ்மாக் மதுப் புட்டிகளைப் பதுக்கிவைத்து கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தாராம். இவரிடம் வீரகனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கருப்பண்ணன் லஞ்சம் கேட்டு பேரம் நடத்தும் விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் கருப்பண்ணன் கடந்த பிப். 25 ஆம் தேதி சேலம் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.