ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்: கு.செல்வப் பெருந்தகை
காட்டுப்பன்றி தாக்கி முதாட்டி உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கோத்தகிரி அருகே உள்ள அரவேணு கேத்தரின் அருவி செல்லும் சாலையில் குடியிருந்தவா் செல்லம்மாள் (60). இவா் சனிக்கிழமை தனது பேரக்குழந்தையை பாா்க்க சென்றபோது புதா் பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுப்பன்றி செல்லம்மாளை தாக்கியது.,
இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து செல்லம்மாளின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி உயிரிழந்தது குறித்து கோத்தகிரி வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.