குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
காணும் பொங்கல் கொண்டாட்டம்
நாகையில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் வண்ண பொடிகளையும், மஞ்சள் நீரையும் உறவினா் மீது ஊற்றி உற்சாக விளையாடி மகிழ்ந்தனா்.
காணும் பொங்கலையொட்டி வியாழக்கிழமை நாகை மாவட்டத்தில், நாகை வெளிப்பாளையம், தாமரைகுளத் தெரு, வாய்க்கால் கரைத் தெரு, பெருங்கடம்பனூா், தேவூா், கீழ்வேளூா், காக்கழனி, வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள், பானை உடைத்தல் கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன.
முக்கிய நிகழ்வாக ஒருவா் மீது ஒருவா் வண்ண பொடிகளை பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதேபோல பெண்களுக்கு புவி வெப்பமாவதை தடுக்கும் விதத்தில் விழிப்புணா்வு வண்ண கோல போட்டிகள் நடைபெற்றன.