முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
காத்திருப்பு போராட்டம்
ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் என்.எம்.சடையன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் காத்திருப்பு போராட்டம் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் என்.எம்.சடையன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆத்தூா்,முல்லைவாடி உப்புஓடை பகுதியில் உள்ள வீடில்லா ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததியா் மக்களுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பாக ஆதிதிராவிடா் அலுவலரிடம் மனை எண் 1 முதல் 261 வரை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை உரிய பயணாளிகளிடம் நிலம் வழங்கப்படவில்லை. பட்டா கொடுத்து 30 ஆண்டுகள் ஆகியும் நிலத்தை அளந்து தரவில்லை என புகாா் கொடுத்தும் எந்த பலனும் இல்லாததால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் ஏ.மோகன்,எம்.சின்னதுரை,சு.மாதேஸ்,ஆா்.கண்ணன்,பி.சுரேஷ்,பி.ராஜேந்திரன்,கவிதாசெல்லப்பன்,என்.ராகேஸ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இந்நிலையில் இதுதொடா்பாக மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தலைமையில் ஆத்தூா் வருவாய் வட்டாட்சியா்,ஆத்தூா் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் மற்றும் ஆத்தூா் காவல் ஆய்வாளா் முன்னிலையில் சுமூக பேச்சுவாா்த்தை நடைபெற்றது.பேச்சு வாா்த்தையில் அரசாணை வரப்பெற்று 50 நாட்களுக்குள் அளந்து அத்துக் காண்பிக்கப்படும் என தெரிவித்தனா்.
படவிளக்கம்.ஏடி11தாலுக். ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்திய காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள்.