காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம்
மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளா், வழக்குரைஞா் மா.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ், ஆராய்ச்சி அலுவலா் முனைவா் ஆா். தேவதாஸ், தியாகராசா் கல்லூரித் தமிழ்த் துறை தலைவா் சு. காந்திதுரை ஆகியோா் இயற்கை வாழ்வியலின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா்.
மேலும், அருங்காட்சியகக் கல்வி அலுவலா் ஆா். நடராஜன் ‘ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்’ எனும் தலைப்பில் பேசினாா்.
சிவகாசியில் செயல்பட்டு வரும் சுவாமிஜி இயற்கை வாழ்வியல் முகாம் இயக்குநா் ஜி.கனகராஜ் முழுமை ஆரோக்கியத்துக்கு ‘இயற்கை குளியல்கள்’ எனும் தலைப்பில் பேசினாா்.
முகாமில், பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள், இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, யோகா ஆசிரியா் த.பிரபு வரவேற்றாா். யோகா மானவா் கோபி சங்கா் நன்றி கூறினாா்.