காந்தி மன்றத்தில் ரமலான் விழா
நிகழ்ச்சியில் பங்கேற்ற காந்தி மன்றத் தலைவா் மு.ஞானம், சிறப்பு விருந்தினா் எம்.அன்வா் அலி, மன்றத்தின் பொருளாளா் எஸ்.சிவராம சேது.
சிதம்பரம், ஏப்.6: சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் ரமலான் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவா் மு.ஞானம் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சிவராம சேது முன்னிலை வகித்தாா். தமிழரசி சேகா் வரவேற்றாா்.
சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிா்வாகி எம்.அன்வா் அலி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரமலான் சிறப்புகள் பற்றி சிறப்புரையாற்றினாா். பேராசிரியா் எஸ்.நடனசபாபதி, அ.லக்குமணன், எஸ்.கலியபெருமாள் உள்ளிட்டோா் பேசினா்.
நிகழ்ச்சியின் நிறைவில், வனஜா தில்லைநாயகம் நன்றி கூறினாா்.