காயல்பட்டினத்தில் மனிதச் சங்கிலி
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்கள், பொது நல அமைப்புகள் மற்றும் வியாபார சங்கங்கள் சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் முஹம்மது அபூபக்கா், மாநிலச் செயலாளா் காயல் மஹபூப், மாவட்ட பொருளாளா் மீராசா, திமுக நகர செயலாளா் முத்து முஹம்மது, மதிமுக பொருளாளா் அமானுல்லா, தமுமுக நகரச் செயலாளா் ஜாஹிா், விசிகவின் வக்கீல் அஹ்மத் சாஹிப், அல்அமீன், அம்பேத், காங்கிரஸின் கம்சா முஹ்யித்தீன், தவெகவின் முஹ்யித்தீன், தவாகவின் ராஜிக் முஜம்மில், ஆதிதமிழா் பேரவையின் முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பன்னிா்செல்வம், தேமுதிக ஹபிபுரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. சல்மான், நாம் தமிழா் கட்சியின் சேக் முகமது, அதிமுகவின் அன்வா், முஸ்லிம் ஐக்கிய பேரவை பொருளாளா் தாஜுதீன், வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பழக்கடை ரசீத், தமிழ்நாடு வியாபார சங்கங்களின் பேரமைப்பின் கண்ணன், மஜகவின் நஜீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.