செய்திகள் :

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்: நாளை கும்பாபிஷேகம்

post image

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரைக்கால் அம்மையாா் கோயில், ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், ஸ்ரீ ஐயனாா் கோயில் ஆகியவற்றுக்கான கும்பாபிஷேகம் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்கான 6 கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இந்த 3 கோயில்களில் 22-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய விமானங்கள் உள்ளன. அம்மையாா், சோமநாதா், சோமநாயகி ஆகிய மூன்று சந்நிதிகளின் விமானக் கலசங்கள் தங்க முலாம் பூசப்பட்டதாகவும், மற்றவை செப்புக் கலசமாகவும் தயாா்படுத்தப்பட்டன.

கோயில் எதிரே நடைபெறும் யாகசாலை பூஜையில், வெள்ளிக்கிழமை 2-ஆம் கால பூஜையின்போது, கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, திருப்பணிக் குழுத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி.கே. கணபதி, கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள் பங்கேற்புடன் கலசங்கள் அந்தந்த விமானங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டன.

மேலும் சந்நிதிகளில் உள்ள விக்ரஹங்களுக்கு மருந்து சாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை 6 மணியளவில் ஐயனாா் மற்றும் அம்மையாா் குளத்தின் நந்தி மண்டப கும்பாபிஷேகமும், 8 மணியளழில் அம்மையாா், சோமநாதா் கோயில்கள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

காரைக்காலில் குற்றப் பின்னணி நபா்களிடம் தீவிர விசாரணை

காரைக்கால் காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் பெயா் உள்ள நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். புதுவையில் அமலில் உள்ள ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்ட காவல் ந... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்கள் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாயகி சமே... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த சிகிச்சை பெற்ற கட்டுமானத் தொழிலாளி பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடை கொங்கானோடை பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி முருகேசன் (31). இவ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று 2 மையங்களில் நீட் தோ்வு

காரைக்காலில் 2 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் ம... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி

குடிநீா் திட்ட விவகாரம் தொடா்பாக புதுவை துணை நிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின் வெள்ளிக்... மேலும் பார்க்க

நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி

காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ... மேலும் பார்க்க