Virat Kohli : 'அது ஒரு அவமானம்...' - விராட் கோலியின் ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ...
காரைக்குடி மின் மயானம் மே 26 வரை செயல்படாது!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி சாா்பில் பழைய சந்தைப்பேட்டை அருகில் உள்ள எரிவாயு தகன மேடையில் (மின் மயானம்) பழுது நீக்கும் பணி நடைபெறவிருப்பதால், செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் வருகிற 26-ஆம் தேதி வரை செயல்படாது என இந்த மயானத்தை நிா்வகித்து வரும் அறக்கட்டளை நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை: காரைக்குடியில் சந்தைப்பேட்டை அருகில் எரிவாயு தகன மேடை உள்ளது. இங்கு பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் வருகிற 26-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு செயல்படாது. இதன் பின்னா் வழக்கம்போல செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.