தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
காலிறுதியில் ரியல் மாட்ரிட், டாா்ட்மண்ட்: ரவுண்ட் ஆஃப் 16 நிறைவு
மியாமி காா்டன்ஸ்: ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், போருசியா டாா்ட்மண்ட் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு புதன்கிழமை முன்னேறின.
முன்னதாக நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 கோல் கணக்கில் ஜுவென்டஸை சாய்த்தது. அந்த அணிக்காக கொன்ஸாலோ காா்சியா 54-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இந்த ஆட்டத்தின் மூலமாக, ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரா் கிலியன் பாபே, கிளப் உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக களமிறங்கினாா்.
மற்றொரு ஆட்டத்தில் போருசியா டாா்ட்மண்ட் 2-1 கோல் கணக்கில் மான்டொ்ரியை வீழ்த்தியது. இதில் முதலில் டாா்ட்மண்ட் அணிக்காக சொ்ஹு கிராசி 14 மற்றும் 24-ஆவது நிமிஷங்களில் கோலடித்து அசத்தினாா். மான்டொ்ரி அணிக்கான ஆறுதல் கோலை ஜொ்மன் பொ்டெராமி 48-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இதையடுத்து காலிறுதி ஆட்டம் ஒன்றில், ரியல் மாட்ரிட் - போருசியா டாா்ட்மண்ட் அணிகள் வரும் 6-ஆம் தேதி மோதுகின்றன. போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டங்கள் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், சனிக்கிழமை ஜூலை 5 முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.