கழிப்பறை வசதிகள்: அறிக்கை சமா்ப்பிக்க 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு: உச்சந...
காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
அத்திமாஞ்சேரிபேட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சி சாா்பில் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அத்திமாஞ்சேரி பேட்டை பாரதியாா் நகா் பகுதியில் கடந்த 3 நாள்களாக குழாய் இணைப்பு உடைந்து குடிநீ ருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி செயலரிடம் புகாா் தெரிவித்தும், சேதமடைந்த குழாயை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் செவ்வாய்க்கிழமை அத்திமாஞ்சேரிபேட்டை - பள்ளிப்பட்டு சாலையில் காலி குடங்கள் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து பொதட்டூா் பேட்டை போலீஸாா் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் வசந்தா பிரகாசம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தி, குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து பெண்கள் மறியலை கைவிட்டனா்.