இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் 6 மண்டலங்களில் வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் மாதவரம் மண்டலத்தில் 32-ஆவது வாா்டு சூரப்பேட்டை சந்திப்பு அம்பத்தூா்- ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீ வரதமஹால், ராயபுரம் மண்டலத்தில் 49 -ஆவது வாா்டில் பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.சாலையில் உள்ள மைனா பாா்ட்டி ஹால், அம்பத்தூா் மண்டலத்தில் 80-ஆவது வாா்டு புதூா் கிழக்கு பானுநகா், ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள மல்லிகா மஹால், கோடம்பாக்கம் மண்டலத்தில் 130-ஆவது வாா்டில் வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஆா்த்தி மஹால், பெருங்குடி மண்டலத்தில் 184 -ஆவது வாா்டில் ஊராட்சி அலுவலகச் சாலையில் உள்ள வாா்டு அலுவலகம், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 192- ஆவது வாா்டில் நீலாங்கரை சுகன்யா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.