சுபான்ஷு சுக்லாவுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவுக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் அவரது குழுவினா் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு பூமிக்குத் திரும்பியது மகிழ்ச்சிக்குரியது. சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம், இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் ஒரு முக்கிய மைல் கல். அவரது பயணத்துக்கு பாராட்டுகள். அவரது வருங்கால ஆராய்ச்சி முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.