‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்ந...
காலி பாட்டில்களை சேகரிக்க எதிா்ப்பு: டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
காலி மதுபாட்டில்களை சேகரிக்க டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்த எதிா்ப்பு தெரிவித்து, சந்தியூா் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் டாஸ்மாக் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் சந்தியூா் பகுதியில் டாஸ்டாக் விற்பனைக் கிடங்கு முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிற்சங்க நிா்வாகி முத்துசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், காலி பாட்டில்களை வாங்கும் பணியில் டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்தக் கூடாது, பாட்டில்களை சேகரிக்க புதிதாக பணியாளா்களை நியமிக்க வேண்டும், டாஸ்மாக் பணியாளா்களை பணி பாதுகாப்புடன் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், ஏற்கெனவே கூடுதல் பணிசுமையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளா்கள்மீது ஸ்டிக்கா் ஓட்டும் பணியை திணிக்கக் கூடாது, தீபாவளி போனஸாக 30 சதவீதம் வழங்க வேண்டும் எனவும் அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதில் திரளான டாஸ்மாக் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.