செய்திகள் :

கால்பந்துப் போட்டியில் வென்ற பொறியியல் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு!

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரி மாணவா்கள் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதற்காக கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை அவா்கள் பாராட்டப்பட்டனா்.

மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கால்பந்துப் போட்டி கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் கடந்த மாா்ச் 22, 23 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் காரைக்குடி ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும், ஈரோடு அரசு கலை அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில், 5-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி வென்று முதலிடத்தைப் பெற்றது.

வென்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடல் கல்வி இயக்குநா் வி. சுந்தரையும் ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா, கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) சிவக்குமாா், கல்லூரி மேம்பாட்டு அலுவலா் பழனிவேல், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பட்டா கோரி தரையில் படுத்து ஆட்சியரை வழிமறித்த மனுதாரா்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மனுதாரா் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து மாவட்ட ஆட்சியரை வழிமறித்தாா். அவரை போலீஸாா் அங... மேலும் பார்க்க

எஸ். கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண... மேலும் பார்க்க

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரையை அடுத்துள்ள கொத்தரி கிராமத்த... மேலும் பார்க்க