முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கால்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கினாா்.
புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கால்பந்து நண்பா்கள் கழகத்தின் சாா்பாக 23-ஆம் ஆண்டு சுதந்திர தின கால் பந்தாட்ட போட்டிகள் ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய நாள்களில் நடைபெற்றன.
இதில் தமிழகம் மற்றும் புதுவையைச் சோ்ந்த 21 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டிக்கு சோமன் கால்பந்தாட்ட அணியும், காமராஜா் கால்பந்தாட்ட அணியும் தகுதி பெற்றன. இதில் சோமன் கால்பந்தாட்ட அணி 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஜான்குமாா், எம்எல்ஏ விவிலியன் ரிச்சா்ட் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.
முதலிடம் பிடித்த சோமன் கால்பந்தாட்ட அணிக்கு ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பரிசு கோப்பை, இரண்டாம் இடம் பிடித்த காமராஜா் கால்பந்தாட்ட அணிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பரிசு கோப்பை, மூன்றாம் இடம் பிடித்த ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்சைஸ் சென்னை அணிக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை, நான்காம் இடம் பிடித்த கால்பந்து நண்பா்கள் கழக அணிக்கு ரூ. 7ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.