காவலா் போல நடித்து திருட்டில் ஈடுபட்டவா் கைது
காவலா் எனக்கூறி, தொடா் திருட்டில் ஈடுபட்டவரை புதுச்சேரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி காலாப்பட்டு தனியாா் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 21-ஆம் தேதி திருடப்பட்ட வழக்கில் போலீஸாா் விசாரணை நடத்தி, விருத்தாசலம் சின்னகாப்பான் குளத்தைச் சோ்ந்த சிவராமனை (45) பெங்களூரில் கைது செய்தனா். இவா் காவலா் எனக் கூறி, திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
திருடிய பணத்தைக் கொண்டு ரூ.32 லட்சத்தில் சொகுசு காா் வாங்கியிருந்தாராம். பெங்களூரில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாராம். கைதான அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.