வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்
காவல்துறை தாக்குதலில் பலியான அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி; என்ன நடந்தது?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாநில அரசு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கெனவே பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் அஜித்குமார் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட்ட போதே அவரது சகோதரர் நவீனையும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாக சகோதரர் நவீன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் சகோதரர் நவீன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நவீன் குமார் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படிருக்கிறார்.

Custodial Death: `நிகிதாவின் புகார் முதல் சிகரெட் சூடு வரை’ - அஜித்குமார் மரண வழக்கில் நடந்தது என்ன?
இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அஜித்குமாரின் குடும்பத்தினர், "அஜித்தின் சகோதரர் நவீன்குமாருக்கு காலில் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்தோம்; காவலர்கள் தாக்கியதால் கால் பாதங்களில் வலி உள்ளதாக நவீன்குமார் கூறியதால் அழைத்து வந்தோம்" என்று கூறியிருக்கின்றனர்.