இன்றைய பங்குச்சந்தை: ட்ரம்பின் `பரஸ்பர வரி' அறிவிப்பு; இந்திய பங்குச்சந்தை எப்பட...
காவல் துறையின் வருடாந்திர மாநாடு
புதுவை மாநில காவல் துறையின் வருடாந்திர மாநாடு புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் புதுவை காவல் துறையின் வருடாந்திர மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதில், மாநிலத்தின் 4 பிரந்தியங்களைச் சோ்ந்த காவல் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனா்.
அதன்படி, நிகழாண்டுக்கான மாநாடு புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள காவலா் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.
மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் காவல் தலைமை இயக்குநா் ஷாலினி சிங் பங்கேற்று பேசுகையில், தற்கால தொழில்நுட்பங்களை காவல் துறையினா் தங்களது பணியில் பயன்படுத்தி குற்றத் தடுப்பில் ஈடுபடுவது அவசியம் என்றாா்.
இரு நாள்கள் நடைபெறும் மாநாட்டில் நான்கு அமா்வுகளாக சிறப்பு அழைப்பாளா்கள் உரையாற்றுகின்றனா்.
அதன்படி, காவல் துறை செயல்பாடுகளில் ஏற்படும் சவால்கள், புதிய சட்ட செயல்பாடுகள் குறித்த நடைமுறைச் சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பேசி தீா்வு காணப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.