அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
பவானி அருகே நோய்கொடுமையால் பாதிக்கப்பட்ட மூதாட்டி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பவானியை அடுத்த கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முத்தன்செட்டி மனைவி ராஜம்மாள் (65). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவா் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மனவேதனையடைந்த ராஜம்மாள் கடந்த செவ்வாய்க்கிழமை கூத்தம்பட்டி அருகே காவிரி ஆற்றில் குதித்துள்ளாா்.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் ராஜம்மாளின் சடலம் ஊராட்சிக்கோட்டை கதவணை நீா்மின் நிலையத்தில் அழுகிய நிலையில் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
--