செய்திகள் :

காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத்: ஏப்ரல் 19-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

post image

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து இதனை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கத்ராவில் நடைபெறும் பேரணி ஒன்றிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார். ஆரம்பத்தில் கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாதையில் ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் மட்டுமே இயக்கப்படும்.

பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து இந்தப் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையர், கத்ரா மற்றும் காஷ்மீர் இடையே ரயில் சேவைக்கு அனுமதி வழங்கினார்.

213 ஆப்கன் அகதிகளைத் தாயகம் கடத்திய பாகிஸ்தான்!

தற்போது, ​​பள்ளத்தாக்கில் உள்ள சங்கல்டன் மற்றும் பாரமுல்லா இடையேயும், கத்ராவிலிருந்து நாடு முழுவதும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. காஷ்மீர் பாதையில் பகல் நேரத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன மாலையில் பாதுகாப்புப் பணிகள் திரும்பப் பெறப்படுவதால், பள்ளத்தாக்கில் மாலை நேரங்களில் எந்த ரயில்களும் இயக்கப்படுவதில்லை.

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க