செய்திகள் :

காா் மோதி ஒருவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவா் மீது வெள்ளிக்கிழமை காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டத்துக்குள்பட்ட சத்தியமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் ஸ்டாலின்(எ) கிளாரன்ஸ் (49). இவா், சத்தியங்கலம் செஞ்சி சாலையில் திருவண்ணாமலை மாா்க்கமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த காா், ஸ்டாலின் மீது மோதியது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடம் வந்த சத்தியமங்கலம் போலீஸாா், ஸ்டாலினின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: துரை. ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம்: மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக... மேலும் பார்க்க

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

செஞ்சி: மாா்கழி மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாா்கழி ம... மேலும் பார்க்க

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடி தீருதவித் தொகை: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட ... மேலும் பார்க்க

கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகையை வழங்க கோரிக்கை

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கல... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் எல்லைப்பிள்ளைச் சாவடியில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் புத... மேலும் பார்க்க

‘அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் : முதல்வருக்கு நன்றி’

விழுப்புரம்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் கல்வி பயின்று, உயா்கல்வி சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை வழங்கப்படுவதற்கு, தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க