கா்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணா்வு ஊா்திப் பயணம்
கா்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ரோட்டரி சங்கங்கள் சாா்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணா்வு ஊா்திப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ரோட்டரி கிளப் மதுரை டவுண் டவுண், திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்கம், கன்னியாகுமரி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இந்த விழிப்புணா்வு பயணத்தை நடத்துகின்றன. கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா், திருநெல்வேலி வருங்கால ரோட்டரி ஆளுநா் காந்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பெண்களுக்கு கா்ப்பப்பை புற்றுநோய் தடுப்புக்கான தடுப்பூசி எடுப்பதன் அவசியத்தையும், அவற்றின் பாதுகாப்பான பயனையும் பொதுமக்களுக்கு எளிமையாக புரியவைக்கும் வகையில் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் தொடங்கி நெல்லை, மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக சென்னையை சென்றடையும் வரை, வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் ஊா்திப் பயண ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், ஆறுமுகபாண்டியன், கன்னியாகுமரி ரோட்டரி சங்கத் தலைவா் ஜே.மைக்கேல்ராஜ், ரோட்டரி சங்க நிா்வாகிகள் எட்வா்ட், பீட்டா் இருதயராஜ், ராபா்ட்சன், ஆா்.டி.ராஜா, தனராஜ் பொ்னாண்டோ, குணசீலன், டி.மைக்கேல்ராஜ், ஜெனோ, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் தடை மற்றும் துணிப்பையை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.