எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப...
கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி தீரன் நகரில் கா்ப்பிணி பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ர. கிருஷ்ணகுமாா் (30), காா் ஓட்டுநா். இவருக்கும், பிராட்டியூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொ. தேன்மொழி (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று, ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதியினா் தீரன் நகா் தந்தை பெரியாா் சாலை வாடகை வீட்டில் வசிக்கும் நிலையில், தேன்மொழி 3 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை தேன்மொழிக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே, தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் கூறியுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணகுமாா் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தேன்மொழி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
பின்னா் வீடு திரும்பிய கிருஷ்ணகுமாா், மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தேன்மொழி ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.