கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி, குருசுகுப்பம், அஜீஸ் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மிதுன் (17). புதுச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா்.
இவா், புதன்கிழமை தனது நண்பா்களுடன் விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றாா். அப்போது மிதுன் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில்
போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.