``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ வலியுறுத்தல்
கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து வலியுறுத்தினாா்.
சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்கள் மூலமே பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நாட்டில் வந்துள்ளன. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை.
விவசாயிகளுக்கு தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிா்ணயிக்கும் அதிகாரம் வேண்டும். காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றாா்.
வட்ட உறுப்பினா் ஏசையா தலைமை வகித்தாா். அந்தோணிசாமி, செல்லத்துரை, ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் இசக்கிதுரை, மாவட்ட துணைச் செயலா் வேலாயுதம், ஒன்றியச் செயலா் வேலு, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் சுப்பையா, மாதா் சங்க மாவட்டச் செயலா் சண்முகவடிவு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சிங்காரவேலு, கட்டட சங்க மாவட்டத் தலைவா் சக்திவேல், சமுத்திரக்கனி, நகரச் செயலா் பாலசுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், வாசுதேவநல்லூா் ஒன்றிய துணைச் செயலா்கள் முருகன், பாலவிநாயகா், ஒன்றியப் பொருளாளா் சீனிவாசன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் அருணாசலம், நகர துணைச் செயலா் குருவு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் கண்ணன், கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளைச் செயலா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.