செய்திகள் :

கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி

post image

கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் திருப்பூா் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் முத்தனம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (32). இவரது கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சோ்க்கப்பட்டது. அந்தக் குழுவில் உள்ளவா்கள் சமூக வலைதள சேனல்களுக்கு பணம் செலுத்தி அதனை குழுவில் பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது தொடா்பாக விவாதித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் மணியும் அந்தக் குழுவில் கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து குறிப்பிட்ட தொகையை வருவாயாகப் பெற்றாா். பின்னா் மணியை டெலிகிராம் குழுவில் இணைத்தனா்.

அந்தக் குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவதால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறியிருந்தனா். இதை நம்பிய மணி பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் 14 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.18.90 லட்சம் அனுப்பினாா். அதற்கான லாபத்தை எடுக்க முயன்றபோது மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வந்ததோடு, அந்த இணைப்பும் துடிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணி, திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிற்றுந்துகள் முறையான பராமரிப்பில்லை, கூடுதல் கட்டணம் வசூல்

திருப்பூரில் இயக்கப்படும் சிற்றுந்துகள் முறையான பராமரிப்பு இல்லாததோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நல்லூா் நுகா்வோா் மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் என்.சண்முகச... மேலும் பார்க்க

நெருக்கடிநிலை: பாஜக சாா்பில் கண்காட்சி

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சிறுபூலுபட்டியில் நெருக்கடிநிலை 50-ஆம் ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்ந... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கும் மாற்ற கோரிக்கை

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவரது தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்துள்ளாா். திருமணமாகி சில மாதங்களில்... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு

நிலத்தை நாசமாக்கும் நெகிழிப்பை வேண்டாம் என, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்- திருப்ப... மேலும் பார்க்க

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம்

திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் நெரிசல் மிக்க (பீக் ஹவா்ஸ்) நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதி வேக... மேலும் பார்க்க

வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கறிக்கோழி வளா்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி வழங்கக் கோரி பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணை விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ... மேலும் பார்க்க