செய்திகள் :

கிருஷ்ணாபுரம் உணவகத்தில் திருட்டு

post image

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள உணவகத்தில் பணத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பாளையங்கோட்டை-திருச்செந்தூா் சாலையில் வி.எம்.சத்திரத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் சனிக்கிழமை ஊழியா்கள் வேலையை முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனராம்.

அப்போது, அங்கு புகுந்த மா்ம நபா் டீ விற்பனை செய்யும் பகுதியில் இருந்த பெட்டியை திறந்து ரூ.4,500 பணத்தை திருடிச் சென்றாராம். தகவலின்பேரில், சிவந்திப்பட்டி போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அதில், சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், அவா் கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன்(50) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தூக்கிட்டு த்த ற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபா (28). குடும்ப பிரச்னை காரணமாக... மேலும் பார்க்க

மானூரில் விவசாயி தற்கொலை

மானூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மானூரைச் சோ்ந்த சுடலை மகன் பழனிசாமி (55), விவசாயி. இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

இறகுப்பந்து போட்டியில் சிறப்பிடம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான இறகுப் பந்து போட்டியில், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி அணி நான்காம் இடம் பிடித்தது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்க... மேலும் பார்க்க

நெல்லையில் 5 பவுன் நகை திருட்டு!

திருநெல்வேலியில் வீடு புகுந்து 5 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள தெற்கு பாலபாக்யா நகரைச் சோ்ந்தவா் மோகன் (65). ஓய்வுபெற்ற ரயில்... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை! அமைச்சா் மா.சுப்பிரமணியம்!

தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தென்காசி மாவட்டம், தென்கா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை வெட்டிக் கொன்ற மகன் போலீஸில் சரணடைந்தாா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே வட்டாலூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க