செய்திகள் :

"கீழடியில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றவர் மூலம் ஆய்வறிக்கை தயாரிப்பா?" - சு.வெங்கடேசன்

post image

"கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்ட ஶ்ரீராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல்..." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

மதுரையில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "கீழடியில் 102 இடங்களில் குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5,700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு ஆய்வுகள் நடத்தி ஆய்வறிக்கை சமர்பித்தால், அதிலுள்ள ஆதாரம் போதாது என்று இந்திய தொல்லியல் துறையினர் சொல்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே வருடத்தில் 10 குழியைத் தோண்டி சரஸ்வதி நதியை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்வது வேதனையாக உள்ளது.

கீழடி
கீழடி

கீழடி அகழாய்வை மேற்கொண்டவர் சமர்பித்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், கீழடியில் ஒன்றும் கிடைக்கவில்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்த ஶ்ரீராமனை அழைத்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தற்போது சொல்வது தமிழர் நாகரிகத்தையும், வைகை நாகரிகத்தையும் நிராகரிப்பதற்கான அப்படமான சான்று.

கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்ட ஶ்ரீ ராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல், கீழடியில் ஒன்றுமில்லை என்று தான் ஶ்ரீராமன் ஆய்வறிக்கை சமர்பிப்பார்.

தமிழர்களின் உண்மைக்கு எதிராகவும், வரலாற்றுக்கு எதிராகவும், தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகாவும் பாஜக எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ் சமூகம் பதிலடி கொடுக்கும்" என்றார்.

'விஜய்யின் அம்மா கிறிஸ்தவர்; தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக-தான்!'- வெடிக்கும் அப்பாவு

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இதுசம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்திக்கையில் விஜய்யை கடுமையாக... மேலும் பார்க்க

`மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை; அதன் தொடர்ச்சியே `உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்'- ஆர்.பி.உதயகுமார்

"மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆர்.பி. உதயகுமார்இது குறித்து அவர் வெளியிட்... மேலும் பார்க்க

'திமுக கொடி கட்டிய கார்; ஆட்டோவில் ஆயுதங்கள்' - உயிருக்கு ஆபத்து என ஆதவ் அர்ஜூனா புகார்

தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மோகன் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.ஆதவ் அர்ஜூனாஅந்தப்... மேலும் பார்க்க

`திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது; விரைவில் உடையும்!’ - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை ... மேலும் பார்க்க

Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’ - மல்லை சத்யா வேதனை

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரை... மேலும் பார்க்க