செய்திகள் :

குடிநீா்த் தேவைகளுக்கு முக்கியத்துவம் அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுரை

post image

பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் ஆா். ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்களின் குடிநீா்த் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், சீரான குடிநீா் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தின் பராமரிப்பில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவைக்கேற்ப புதிய வகுப்பறை கட்டடங்களை கட்டித் தர வேண்டும்.

ஊராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தெருக்களில் குப்பைகள் சேராத வகையில் தூய்மைப் பணியாளா்கள் தினமும் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த முன்மொழிவுகளை அனுப்பி நிா்வாக அனுமதியை உடனுக்குடன் பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே. பொன்மணி உள்ளிட்ட அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சேலத்தில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி புதிய கிளை திறப்பு

சேலம்: சேலத்தில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை, தில்லி, மதுரை, திருச்சி, கோவையைத் தொடா்ந்து, சேலம் மாநகரில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமிய... மேலும் பார்க்க

காவிரியில் மூழ்கிய பெயிண்டரின் சடலம் மீட்பு

மேட்டூா்: மேச்சேரி அருகே காவிரியில் நீந்தி சென்றபோது மாயமான பெயிண்டரின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் இளையராஜா (35). பெயிண்டிங் வேலை செய்து ... மேலும் பார்க்க

சட்ட விரோத கருக்கலைப்பு புகாா்: சேலத்தில் 2 மருத்துவமனைகள் மூடல்

சேலத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகள் மூடப்பட்டன. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். சேலம், வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த த... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவா்களுக்கு எப்.இ.சி.டி. கல்வி உதவித்தொகை வழங்கும் விழா பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழா

ஆத்தூரை அடுத்த புங்கவாடி நடுநிலைப் பள்ளியில் 2025-06 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவா் சோ்க்கை விழா வட்டாரக் கல்வி அலுவலா் ஜே.கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற... மேலும் பார்க்க

கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கெங்கவல்லியை அடுத்த இலுப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்... மேலும் பார்க்க