சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
ராமேசுவரம் நகராட்சி ஒண்டிவீரா் நகரில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் விழயாக்கிழமை திறக்கப்பட்டது.
ஜீவாமிா்தம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ராமேசுவரம் அமிா்த வித்யாலயம் பள்ளி மேலாளா் லட்சுமி தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், ஜீவாமிா்தம் குழு மாணவ, மாணவிகள், நகா் மன்ற உறுப்பினா், கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா். இந்தியாவில் 5,000 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக லட்சுமி தெரிவித்தாா்.