செய்திகள் :

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

post image

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டு போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) முழு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா இன்று (ஆக. 27) தெரிவித்தார்.

அதேபோல, சிபிஐ(மார்க்சிஸ்ட்) கட்சியும் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலர் எம். ஏ. பேபி தெரிவித்தார்.

சிபிஐ(மார்க்சிஸ்ட்) பொதுச்செயலர் எம். ஏ. பேபிவுடன் பி. சுதர்ஷன் ரெட்டி

முன்னதாக இன்று, தில்லியிலுள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு ஆதரவு கோரிச் சென்ற பி. சுதர்சன் ரெட்டிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது டி. ராஜா பேசும்போது, “எங்களது கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு முழு ஆதரவு தருகிறது.

வலதுசாரி ஃபாசிச சக்திகளால் நாடு கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்தக் காலத்தில், அரசமைப்பு தாக்குதலின் கீழ் இருக்கும் இந்தக் காலக்கட்டதில், நமது சமுதாயத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக நார்கள் தாக்குதலில் இருக்கும்போது... அவர் அரசமைப்பு மாண்புகளை உயர்த்திப்பிடிக்கும் இந்தியாவின் மதிப்புக்குரிய நீதிமான்களில் ஒருவர்.

அவர் எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தப்பட்டுள்ள ஜனநாயகத்துக்காகவும் நாட்டின் அரசமைப்புக்காவும் துணை நிற்கும் வேட்பாளர் ஆவார்” என்றார்.

Delhi: Opposition's VP candidate B Sudershan Reddy arrived at the CPI office in Delhi

நீதிபதி தலையீடு: கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாய உறுப்பினா் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, ஒரு வழக்கில் ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட மிக மூத்த நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதாகக் குற்ற... மேலும் பார்க்க

மாடுகளை வெட்டுவது அமைதியை சீா்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம்

‘இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும்’ என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஹரிய... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவா் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோா்கா் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவா் உயிரிழந்தனா். இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மனீஷ் திரிபாதி க... மேலும் பார்க்க

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெருவோர கடைக்காரா்களுக்கான பிரதமரின் கடன் தீட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயா்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய ... மேலும் பார்க்க

50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீா்வு: மத்திய அரசு நம்பிக்கை

‘அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. மேலும், ‘இந்... மேலும் பார்க்க

‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது’

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த பேச... மேலும் பார்க்க